×

எஸ்பி ஆலோசனை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக இயலாதோர் 60 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற ஆணை

பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக இயலாதோர் 60 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்டக்கலெக்டர் கற்பகம் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வராண்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புற்றுநோய், சிறுநீரக நோய், டயாலஸிஸ் செய்பவர்கள், எச்.ஜ.வியால் பாதிக்கப் பட்டோர்,காசநோய் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு, எந்த ஒரு வேலையும் செய்ய இயலாத நிலையில் வாழ்வாதாரத்திற்கே பொருளீட்ட இயலாத நிலையில் உள்ள பெரம்பலூர் தாலுக்காவைச் சேர்ந்த 11 நபர்களுக்கும், ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த 24 நபர்களுக்கும், குன்னம்தாலுகாவைச் சேர்ந்த 14 நபர்களுக்கும், வேப்பந்தட்டை தாலுக்காவைச் சேர்ந்த 11 நபர்களுக்கும் என மொத்தம் 60 நபர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறையின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் வழங்கினார். மேலும் அப்போது கடந்த 6 மாதங்களுக்கான தொகையான ரூ.6,000 வீதம் 60 நபர்களுக்கும் ரூ.3.60 லட்சம் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. இனி ஒவ்வொரு மாதமும் மேற்கண்ட 60 பயனாளிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த ஜெயபால் என்பவர் இயற்கை மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ரூ.22,500 இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமது திட்ட இயக்குனர் லலிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

The post எஸ்பி ஆலோசனை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக இயலாதோர் 60 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற ஆணை appeared first on Dinakaran.

Tags : Perambalur Collector ,Perambalur ,District Collector ,Karpagam ,Perambalur District Collector's Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...