×

இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு 180 அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க திட்டம் நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் தகவல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு 2.30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டள்ளது. இதற்காக 180 நேரடி கொள்முதல் நிலையம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக நாகப்பட்டினம் மண்டல முதுநிலை மேலாளர் சிவப்பிரியா தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடிகள் முடிவடைந்து அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை வெளிமாவட்ட வியாபாரிகள் வாங்காமல் இருக்க மாவட்டம் முழுவதும் காலதாமதம் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

The post இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு 180 அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க திட்டம் நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Government ,Direct ,Center ,Trade Corporation ,Nagapattinam ,Sivapiriya ,Tamil Nadu Consumer Goods Trading Corporation ,Zone ,Nagapattinam… ,Dinakaran ,
× RELATED வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும்...