×

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜன.30: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம் கேட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரியும், வைகை படுகையான ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், இதற்காக ஒரு சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தும் ‘ மண்ணுரிமை பாதுகாப்புக்கான மக்கள் இயக்கம்’ சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி பாண்டியன் தலைமை வகித்தார். நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர்கள் நாகூர்கனி, கண்.இளங்கோ, தமிழக வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி பாக்கியநாதன், விவசாயி சங்க நிர்வாகி விஜயன் உள்ளிட்ட விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியளிக்க கூடாது என கோஷங்கள் எழுப்பப்பட்டது.

The post ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Hydrocarbon ,Ramanathapuram ,ONGC ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...