×

நவீன ரக பச்சை மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை

தோகைமலை: நவீன ரக பச்சை மிளகாய் சாகுபடி மூலம் அதிக மகசூல் பெறும் வழிமுறை குறித்து முன்னோடி விவசாயி ஆலோசனை வழங்கியுள்ளார். கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் நீண்டகாலமாக மிளகாய் சாகுபடி செய்து வரும் முன்னோடி விவசாயி திருமாணிக்கம் அதிக மகசூல் பெறும் முறைகள் குறித்து கூறியதாவது: மானாவாரி மற்றும் இறவையில் மிளகாய் பயிரிடுவதற்கு கோ 1, கோ 2, கோ 3, பிகேஎம் 1 ஆகிய ரகங்கள் ஏற்றவை. இதில் கோ 1 என்ற ரகமானது சாத்தூர் சம்பா ரகத்தின் மறுதேர்வு ஆகும். இந்த வகை மிளகாய் பழங்கள் நீளமாக வெளிர் சிவப்பு நிறத்துடன் காணப்படும். இந்த ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்தால் 210 நாட்களில் 2.1 டன் காய்ந்த மிளகாய் மகசூல் கிடைக்கும்.

The post நவீன ரக பச்சை மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை appeared first on Dinakaran.

Tags : Tokaimalai ,Kadavur ,Dinakaran ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு