×

கோயில் கட்டும் விவகாரம் திருச்செந்தூரில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஜீவா நகரில் கோயில் கட்டுமான பணிக்காக வரி வசூல் பெறும் விவகாரத்தில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் ஜீவா நகரில் முப்பிடாதி அம்மன் கோயில் உள்ளது. கடந்த மாதம் மழை வெள்ளத்தின் போது இக்கோயில் சேதமடைந்தது. இதனால் இக்கோயிலை புதிதாக கட்டுவதற்கு அப்பகுதியினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இக்கோயில் கட்டுமானத்தின் போது இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு நிலவியதையடுத்து திருச்செந்தூர் ஆர்டிஓ குருசந்திரன் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கோயிலை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

The post கோயில் கட்டும் விவகாரம் திருச்செந்தூரில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Jiva Nagar ,Muppidathi ,Amman Temple ,Jiva Nagar, Tiruchendur ,Thiruchendur ,
× RELATED வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது