×

மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு

சேலம்: மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று, கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோார் உதவித்தொகை, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். ெமாத்தமாக 412 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் மத்தியில் கலெக்டர் பிருந்தாதேவி பேசுகையில், ‘‘பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும் அதிகாரிகள் முன்வர வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் அருகில் உள்ளவர்களிடம் சகஜமாக பேசி, துறை சார்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,’’ என்றார்.

The post மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு appeared first on Dinakaran.

Tags : Salem ,Collector ,Brindadevi ,Weekly People's Grievance Redressal Day ,Salem District ,
× RELATED பேருந்துக்கு காத்திருந்த...