×

விழுப்புரத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

 

விழுப்புரம், ஜன. 30: விழுப்புரம் சாலாமேடு ரயில்வே கேட் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலின் பேரில் தாலுகா காவல்நிலைய போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து விசாரணையில், சாலாமேடு தமிழ்செல்வன் (40), மணி நகர் அருண்குமார் (38), அண்ணா நகர் ஆறுமுகம் (46), நரசிங்கபுரம் முருகன் (40), வி.மருதூர் செந்தில் (42), சாலாமேடு குமரன் (51) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து பணம், புள்ளித்தாள்களை பறிமுதல் செய்தனர்.

The post விழுப்புரத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Taluk Police Station ,Salamedu Railway Gate, Villupuram ,
× RELATED திண்டுக்கல்லில் தேர்தல் விதிமீறி சின்னம் வரைந்த 5 பேர் மீது வழக்கு