×

பாளை யூனியன் சேர்மன் இல்ல திருமண நிச்சயார்த்த விழா

நெல்லை: பாளை யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான கே.எஸ். தங்கபாண்டியன்- ஜான்சிராணி தம்பதியரின் மகள் கலாநிதிக்கும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவக்குமார்- முத்துமாலதி தம்பதியரின் மகன் டாக்டர் சங்கரநாராயணன் (எ) சரணுக்கும் வரும் ஏப். 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு இவர்களது திருமண நிச்சயார்த்த விழா நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் முன்னிலையில் பாளையங்கோட்டையில் நடந்தது. இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், நயினார்நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் மாலைராஜா, ஏஎல்எஸ் லட்சுமணன், ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ, பாளை. மத்திய ஒன்றியச் செயலாளர் போர்வெல் கணேசன், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, மாநில கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் (எ) கணேசன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், திமுக பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பேச்சிபாண்டியன், களக்காடு சித்திக், தொண்டர் அணி மாநில துணைச்செயலாளர் ஆவின் ஆறுமுகம், விவசாய அணி மாநில துணைச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் துரை, முன்னாள் மண்டல சேர்மன் தச்சை சுப்பிரமணியன், கிழக்கு மாவட்டப் பிரதிநிதி இட்டேரி கண்ணன், நடுவை நாராயணன், மில்லத் இஸ்மாயில், பஞ். தலைவர்கள் ராஜவல்லிபுரம் காளி, மேலப்பாட்டம் ரத்னம், திருமலைக்கொழுந்துபுரம் ஐயப்பன், கான்சாபுரம் வேல்துரை, கீழநத்தம் அனுராதா ரவிமுருகன், ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் வீகேபி சங்கர், யூனியன் கவுன்சிலர்கள் நம்பிராஜன், சரஸ்வதி செல்வசங்கர்.

The post பாளை யூனியன் சேர்மன் இல்ல திருமண நிச்சயார்த்த விழா appeared first on Dinakaran.

Tags : Palai ,Union ,House Wedding Engagement Ceremony ,Nellai ,Palai Union ,Southern Union ,DMK ,K.S. Thangapandian-Janshirani ,Kalanithi ,Naam Tamilar Party ,Sivakumar-Muthumalathi ,Dr. ,Sankaranarayanan ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...