×

இந்தியாவை எதிர்க்கும் மாலத்தீவு அதிபர் பதவிக்கு சிக்கல்: பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர திட்டம்

மாலே: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர். இதனால், இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில், அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட 4 அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்குவதற்கான வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக நேற்று முன்தினம் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த வாக்கெடுப்பில் ஒரு எம்பி மட்டுமே நூலிழையில் தப்பினார். மற்ற 3 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க நாடாளுமன்றத்தில் போதிய வாக்குகள் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, அதிபர் முய்சுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) முடிவு செய்துள்ளது. இதற்காக தீர்மானத்தில் போதுமான எம்பிக்களிடம் கையெழுத்து பெறப்பட்ட நிலையில், இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. மாலத்தீவு நாடாளுமன்ற விதிகளின்படி, அதிபரை பதவி நீக்கம் செய்ய 56 ஓட்டுகள் தேவை. 80 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளான எம்டிபி, அதன் கூட்டணி கட்சியான தி டெமாக்ரட்சுக்கு 68 எம்பிக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவை எதிர்க்கும் மாலத்தீவு அதிபர் பதவிக்கு சிக்கல்: பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர திட்டம் appeared first on Dinakaran.

Tags : India ,Malé ,Maldives ,President ,Mohamed Muisu ,China ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...