புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றிய இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்.1-ம் தேதி தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசின் இறுதி பட்ஜெட் இதுவாகும்.வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இது இடைக்கால பட்ஜெட்டாக கருதப்படுகிறது. தேர்தலுக்கு பின்னர் அமையும் அரசு சார்பில் வரும் ஜூலை மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாடாளுமன்ற கூட்டத்துக்கு முன்னர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது வழக்கம். அதன்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று கூட்டியுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி வரை நடக்கிறது.
The post நாடாளுமன்ற கூட்ட தொடர் தொடங்குவதையொட்டி டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் appeared first on Dinakaran.