×

காவிரி குண்டாறு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் திடீர் விலகல்

புதுடெல்லி: காவிரி-குண்டாறு வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகளான இருவரும் நேற்று திடீரென விலகுவதாக அதிரடியாக அறிவித்தனர். காவிரி குண்டாறு இணைப்பு திட்டமானது கடந்த 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் இதற்கு ஆரம்பத்தில் இருந்தே கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து கர்நாடகா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில்,\\” காவிரி-வைகை-குண்டாறு ஆகியவற்றின் உபரி நீரை சேமிப்பது தொடர்பாக கர்நாடகார அரசு தொடர்ந்த வழக்கானது நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் அதனை உடனடியாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என தெரிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தாமாக முன்வந்து ஒரு தகவலை தெரிவித்தார். அதில்,\\”நீதிபதி அரவிந்த் குமார் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். மேலும் இதே வழக்கில் நான் வழக்கறிஞராக இருந்தபோது நீதிமன்றங்களில் ஆஜராகி வாதங்களை முன்வைத்துள்ளேன். அதனால் காவிரி குண்டலாறு வழக்கை இந்த அமர்வு விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் நாங்கள் விசாரணையில் இருந்து விலகிக் கொள்கிறோம். இருப்பினும் வழக்கு புதிய அமர்வில் பட்டியலிட்டு விரைவில் விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டனர்.

The post காவிரி குண்டாறு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் திடீர் விலகல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Cauvery ,Gundar ,New Delhi ,Karnataka government ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...