×

அமலாக்கத்துறை, சிபிஐயை வீட்டுக்கு அனுப்புவதாக பா.ஜ மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கூச் பெஹார்: வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜவுக்கு வாக்களிக்காவிட்டால், சிபிஐ, அமலாக்கத்துறைகளை வீடுகளுக்கு அனுப்புவோம் என்று பாஜ மிரட்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: குடியுரிமை திருத்தம் சட்டத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். மக்களவை தேர்தலுக்கு முன் அரசியல் செய்யத்தான் ஒன்றிய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வரும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மத்திய விசாரணை அமைப்புகளை பா.ஜ தேர்தலுக்கு பயன்படுத்துகிறது. பா.ஜவுக்கு வாக்களிக்காவிட்டால், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளை உங்கள் வீட்டிற்கு அனுப்புவோம் என்று தொலைபேசியில் மக்களை பா.ஜ மிரட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட கடவுளை வழிபட வேண்டும் என்ற பாஜவின் எந்த உத்தரவையும் நான் பின்பற்ற மாட்டேன். நான் ராமாயணம், குரான், பைபிள், குரு கிரந்த சாகிப் போன்றவற்றைப் பின்பற்றுகிறேன். வெளியில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடுவதற்காக ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று நாடகம் ஆடுவதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

The post அமலாக்கத்துறை, சிபிஐயை வீட்டுக்கு அனுப்புவதாக பா.ஜ மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,CBI ,Mamata Banerjee ,West Bengal ,Chief Minister ,Lok Sabha ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED மம்தா பற்றி அவதூறு: பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய்-க்கு நோட்டீஸ்