×
Saravana Stores

தமிழகத்துக்கு கொடுக்க வேண்டியதை தராமல் மோடி சும்மா வந்தால் மக்கள் ஏற்கமாட்டார்கள்: நடிகை ரோகிணி பேட்டி

சேலம்: சேலத்தில் நடிகை ரோகிணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்கிறார். அவருக்கு தமிழ்நாடு அவ்வளவு பிடித்து இருக்கிறது என்பதற்காக வரவில்லை. அப்படி வந்தாலாவது தன்னை தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று பிரதமர் நினைக்கிறார். ஒரு பிரதமர் பதவிக்கான எல்லா மரியாதையும் அவருக்கு இருக்கிறது. தமிழகத்துக்கான அனைத்தையும் அவர் வழங்கினால் நன்றாக இருக்கும். சும்மா வந்துவிட்டு போனால் பத்தாது. நம் தாய்மொழியை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் பல ஆண்டாக இந்தி திணிப்புக்கு எதிராக போராடி தான், திராவிட இயக்கம் பெரிய இயக்கமாக வளர்ந்து இருக்கிறது. எப்போதும் நடக்கிற தாக்குதல் நடந்து கொண்டே இருக்கும். அதற்கான எதிர்வினையை ஆற்றிக்கொண்டே இருப்போம். மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று முதல்வரே கூறி வருகிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மகளிர் உரிமை திட்டம், பல நூலகங்கள் திறப்பு, புத்தக கண்காட்சிகள் நடத்தியுள்ளனர். படிப்பை மாணவர்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். எந்த மாநிலமும் இந்த அளவுக்கு செய்யவில்லை. அந்த இடத்தில் திமுக அரசு மீதான நடவடிக்கைகளில் மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்துக்கு கொடுக்க வேண்டியதை தராமல் மோடி சும்மா வந்தால் மக்கள் ஏற்கமாட்டார்கள்: நடிகை ரோகிணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Rohini Petty ,Salem ,Rohini ,Tamilnadu ,Tamils ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...