×

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று முதல் அனைத்து அரசு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்

* கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பஸ்கள்

* மாதவரத்தில் இருந்து 160 பஸ்கள் புறப்படும்

* பொதுமக்கள் கோயம்பேடு செல்ல வேண்டாம்

சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று முதல் இயக்கப்பட உள்ளன. எனவே, பயணிகள் இனி கோயம்பேடு பேருந்து நிலையம் செல்ல வேண்டாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் சென்னை கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்பட உள்ளன. மேலும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் அதிகப்படியான பேருந்துகளும், அதன்பிறகு பயணிகள் அடர்விற்கு ஏற்ப பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதன்படி, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட மாட்டாது.

இந்த பேருந்து இயக்க மாற்றத்தினால் பயணிகளின் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி செல்லும்போது தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றடைந்து, பின் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். எனவே, பொதுமக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல விடப்பட்டுள்ள பேருந்துகள் இயக்கத்திற்கு ஏற்றவாறு தங்கள் பயணத்தினை அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்து வழித்தடங்களின் விவரம் பின்வருமாறு:

வழித்தடங்கள் கிளாம்பாக்கம் மாதவரம்

திருச்சி 118 18
சேலம் 66 17
விருத்தாசலம் 30 6
கள்ளக்குறிச்சி 50 16
விழுப்புரம் 59 16
கும்பகோணம் 52 14
சிதம்பரம் 21 5
நெய்வேலி 46 11
கடலூர்(வழி)புதுச்சேரி, திண்டிவனம் 32 5
புதுச்சேரி (வழி) திண்டிவனம் 35 10
திருவண்ணாமலை (வழி) செஞ்சி 125 22
போளூர் 30 20
வந்தவாசி 46
மொத்தம் 710 160

The post தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று முதல் அனைத்து அரசு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Klambach ,Madhavaram ,Koyambedu Chennai ,Dinakaran ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை...