×

48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை இதுவரை 2.77 லட்சம் பேர் பார்வை: சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை 28.1.2024 வரை 2,77,876 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள். 25.1.2024 முதல் 28.1.2024 வரை 4 நாட்களில் மட்டும் 94,352 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் இன்று (29.1.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். க.மணிவாசன், முதன்மை செயலாளர் , சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் , மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முன்னணி சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள்.

முதலமைச்சர் அவர்களின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து துறைகளை சேர்ந்த அரங்கங்கள் அமைத்து தீவுத்திடலில் நடைபெற்று வரும் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை 28.1.2024 வரை 2,77,876 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள். 25.1.2024 முதல் 28.1.2024 வரை 4 நாட்களில் மட்டும் 94,352 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள். சுற்றுலா வளர்ச்சித் திட்டப்பணிகளை பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள், உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை துணை செயலாளர் .A.மணிக்கண்ணன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் .இ.கமலா உள்பட சுற்றுலாத்துறை உதவி இயக்குநர்கள், சுற்றுலா அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை இதுவரை 2.77 லட்சம் பேர் பார்வை: சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : 48th Indian Tourism & Industry Exhibition ,Tourism Minister ,Chennai ,48th Indian Tourism and Industry Exhibition ,Tourism Minister Ga ,Ramachandran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...