×

வெள்ளியை உருக்கி ஊற்றியது போல கொட்டும் தண்ணீர் ஆசை குளியலுக்கு அழைக்குது அருவி: சின்னச்சுருளிக்கு தேவை அடிப்படை வசதி


வருசநாடு: வருசநாடு அருகே உள்ள சின்னசுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே, கோம்பைத்தொழு மலையடிவாரத்தில் சின்னசுருளி அருவி அமைந்துள்ளது. மதுரை, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சின்னமனூர், கம்பம், திண்டுக்கல், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு குளிக்க வருகின்றனர்.

இந்நிலையில், அருவியில் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சோப்பு போட்டு குளித்து அசுத்தம் செய்கின்றனர். அருவியில் இருந்து வரும் தண்ணீரை 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். சின்னச்சுருளி அருவியை மேகமலை ஊராட்சி மன்றத்திடம் முழுமையாக ஒப்படைத்தால் வருவாய் பெருகும். ஊராட்சி செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இருக்கும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால், அருவியைச் சுற்றிலும் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சுற்றுலப் பயணிகள் கூறுகையில், ‘அருவியை பாதுகாப்பதற்கு அரசு அதிகாரிகளும் தமிழக அரசும் முன்வர வேண்டும். அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பயணிகளை பாதுகாப்பதற்கும், அவர்கள் தங்குவதற்கும் அறைகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக ஏற்கனவே பல அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post வெள்ளியை உருக்கி ஊற்றியது போல கொட்டும் தண்ணீர் ஆசை குளியலுக்கு அழைக்குது அருவி: சின்னச்சுருளிக்கு தேவை அடிப்படை வசதி appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Chinnasuruli Falls ,Chinnasuruli waterfall ,Gombaitholu ,Theni district ,Madurai ,Andipatti ,Usilambatti ,Aasi Aruvi ,Chinnachuruli ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்