×

கீரைக் குணுக்கு

தேவையானவை

கடலைப்பருப்பு,
துவரம்பருப்பு,
உளுத்தம்பருப்பு – தலா ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 4,
கீரை – ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் – 250 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

மூன்று பருப்பு களையும் ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, வடிகட்டவும், பின்னர் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய கீரையை வதக்கி, அரைத்த மாவுடன் கலந்து பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு மாவைச் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

The post கீரைக் குணுக்கு appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்