×

போப், ஹார்ட்லி செயல்பாடு அபாரம்: இங்கி. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாராட்டு

ஐதராபாத் : இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், நான் கேப்டன்சியை ஏற்றுக் கொண்டதில் இருந்து ஏராளமான சிறந்த வெற்றிகளையும், காட்சிகளையும் கண்டுள்ளோம். தோல்வியடைந்தாலும், அந்த ஆட்டம் சுவாரஸ்யமானதாக இருந்துள்ளது. ஆனால் இந்திய அணிக்கு எதிரான இந்திய மண்ணில் மிகச்சிறந்த வெற்றியை பெற்றுள்ளோம். இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வெற்றியாக இதனை கருதுகிறேன். இந்திய மண்ணில் முதல்முறையாக கேப்டனாக களமிறங்குகிறேன்.

எப்போதும் ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை உற்று கவனிப்பேன். முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்த போது ஏராளமானவற்றை கற்றுக் கொள்ள முடிந்தது. எப்படி இந்திய ஸ்பின்னர்கள் பவுலிங் செய்தார்கள், ரோகித் சர்மா எப்படி ஃபீல்ட் செட் அமைக்கிறார் என்பதை கவனித்தேன். அதனை பவுலிங்கின் போது செயல்படுத்தினேன். இங்கிலாந்து அணியில் உள்ள ஒவ்வொரு வீரரின் செயல்பாடுகளும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. டாம் ஹார்ட்லியின் 9 விக்கெட்டுகள், போப்பின் கம்பேக் இரண்டும் மிகச்சிறந்த ஆட்டம். டாம் ஹார்ட்லி முதல்முறையாக இங்கிலாந்து அணிக்குள் வந்துள்ளார். அவருக்கு நீண்ட ஸ்பெல் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு அதிகளவு நம்பிக்கையை அளித்தோம்.

ஏதோ கட்டத்தில் நான் அவர் பக்கம் செல்வேன் என்று எனக்கு தோன்றியது. இங்கிலாந்து அணிக்கு தேர்வான அத்தனை வீரர்கள் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. நானும், ஜோ ரூட்டும் ஆசிய மைதானங்களில் ஏராளமான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறோம். ஆனால் போப் ஆடிய ஆட்டத்தை பார்த்து மிரண்டுவிட்டோம். போப் ஸ்டீவ் ஷாட்ஸ் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் மூலமாக இந்திய ஃபீல்டிங்கிற்கு ஏற்ப பேட்டிங் செய்தார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களில் ஆசிய மைதானங்களில் ஆடப்பட்ட இன்னிங்ஸ்களில் இதுதான் சிறந்தது என்று நிச்சயம் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

The post போப், ஹார்ட்லி செயல்பாடு அபாரம்: இங்கி. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Pope ,Hartley ,Ben Stokes ,Hyderabad ,England ,India ,Dinakaran ,
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து