×

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட வழக்கு: அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை வழங்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட வழக்கில் அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை வழங்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கூடுதல் எஸ்பியாக பணியாற்றியவர் பல்வீர் சிங். நேரடி ஐபிஎஸ் அதிகாரியான இவர், 2020ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். மிகவும் நேர்மையாகவும், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். அதேநேரத்தில் சிலரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, அவர்களின் பல்லைப் பிடுங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்பேரில், உள்துறை செயலாளர் அமுதா தலைமையிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. மேலும், பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு3 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தது. இது குறித்து தகவல்கள் வெளியானதும் சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. மேலும், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் பல்வீர் சிங் உள்பட 15 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட வழக்கில் அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் நடந்த நாளின் காவல் நிலைய சிசிடிவி காட்சி, அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி இளங்கோவன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிசிடிவி காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

The post விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட வழக்கு: அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை வழங்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Amutha IAS ,ICourt branch ,Madurai ,ICourt ,Balveer Singh ,Tirunelveli district ,Ambasamudram ,Dinakaran ,
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...