×

காவல்துறையை எச்சரிக்கும் வகையில் எம்.எல்.எம். நிறுவன அதிபர் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு..!!

கோவை: எம்.எல்.எம். நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சுமார் 5ஆயிரம் பேர் திரண்டுள்ள நிலையில், காவல்துறையை எச்சரிக்கும் வகையில் எம்.எல்.எம். நிறுவன அதிபர் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்துக்கு ஆதரவாக கோவையில் திரளும் மக்களை போலீஸ் தடுக்கக்கூடாது என எம்.எல்.எம். நிறுவன அதிபர் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.எம். மோசடி புகார் – போலீஸ் வழக்கு பதிவு

கோவையில் யூடியுபில் விளம்பரம் பார்த்தால் லாபம் கிடைக்கும் என நூதன எம்.எல்.எம். மோசடி நடைபெறுவதாக புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் வழக்கு பதிவுசெய்த நிலையில் எம்.எல்.எம். நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். இணைய வழியில் பகுதி நேர வேலை என சைபர் க்ரைம் கும்பல் மோசடி செய்வதாக எழுந்த புகாரில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

யூடியூபில் வீடியோ பார்த்தால் பணம் என மோசடியா?

இணைய வழியில் அவர்கள் குறிப்பிடும் வீடியோவை பார்ப்பதன் மூலம் தினசரி ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என மோசடி நடப்பதாக புகார் எழுந்தது. தினசரி வீடியோவை முழுமையாக பார்த்து அதில் குறிப்பிட்டிருக்கும் கேப்ட்சாவை உள்ளீடு செய்தால் பணம் கிடைக்கும் என மோசடி நடப்பதாக புகார் எழுந்தது. சில ஆயிரங்களில் முதலீடு செய்தால் ரூ.200 முதல் வங்கிக்கணக்கு பணம் வரும் எனச்சொல்லி மோசடி புகார். லட்சங்களில் முதலீடு செய்தால் அதற்கேற்ப ஆயிரங்களில் வங்கிக்கணக்கு வரும் பணம் வரும் எனச் சொல்லி மோசடி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் பகுதி நேர வேலையாக வீடியோ பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனச் சொல்லி மோசடி என கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பல கோடி ரூபாயை நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கோவையில் பரபரப்பு

கோவை நீலாம்பூர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்லைன் செயலி நிறுவனத்துக்கு ஆதரவாக வாடிக்கையாளர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கோவையில் திரண்டுள்ளனர்.

The post காவல்துறையை எச்சரிக்கும் வகையில் எம்.எல்.எம். நிறுவன அதிபர் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : MLM ,Coimbatore ,M.L.M. ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!