×

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் 3 முறை கூட்டத்தொடர் கூடுகிறது. இதில், பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும். அதை தொடர்ந்து, மழைக்காலக் கூட்டத் தொடர் மற்றும் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. எனவே, இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடக்கிறது. இது ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார்.

அதை தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதி ஆண்டுக்கான ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம், நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நெருங்குவதால் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றிய இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

The post நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Pragalat Joshi ,Delhi ,Dinakaran ,
× RELATED நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கான...