×

திண்டுக்கல் அருகே மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஒருத்தட்டு கிராமத்தில் மூதாதையர்களை நினைவுக்கூறும் வகையில் இந்து, இஸ்லாமிய மதத்தினர் இணைந்து நடத்தும் சந்தனக்கூடு விழா ஒவ்வொரு வருடமும் கொண்டாட படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. அதில் இஸ்லாமிய பரம்பரை மூத்த வள்ளியர்களால் களத்திலிருந்து கொடிமரமும், சந்தனக்கூடும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பாரம்பரிய முறைப்படி வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பளித்த கிராமமக்கள் சாதிமத வேறுபாடின்றி மூத்த வள்ளியர்களின் காலில் தண்ணீர் ஊற்றி கழுவி உப்பு, சர்க்கரை, அரிசி உள்ளிட்டவற்றை வழங்கி ஆசி பெற்றனர்.

அதனை தொடர்ந்து மூதாதேயர்களின் சாந்தாவில் சந்தானம் பூசி பழங்கள், இனிப்புகள் படைத்தும் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தியும் இந்து, முஸ்லிம்கள் இணைந்து சிறப்பு கூட்டு பிராத்தனை செய்தனர். சந்தன கூடு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஒருத்தட்டு கிராமத்தை பூர்விகமாக கொண்டு சென்னை, மதுரை, கோவை மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வசித்து வரும் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல் அருகே மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Sandalwood Festival ,Dindigul ,Orutattu village ,Hindus ,
× RELATED திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய்...