×

சென்னையில் பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் கண்காட்சி: 146 இனங்கள், 500க்கும் மேற்பட்ட விதவிதமான அலங்காரத்துடன் அணிவகுக்க செல்லப்பிராணிகள்

சென்னை: சென்னையில் மூன்று நாட்கள் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. விதவிதமாக குறும்பு செய்து அசத்தி போட்டிகளில் பங்கேற்று செல்லப்பிராணிகள் பரிசுகளை தட்டி சென்றன. கீழ்பாக்கத்தில் நடந்த கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்ட், ராட்வைலர், டாபர்மேன், பக் டெரியர், சைபீரியன் ஹஸ்கி, லேப்ரேடர் போன்ற 146 இனங்களை சேர்ந்த 568 நாய்கள் பங்கேற்றன.

அழகு போட்டியில் பங்கேற்க அழைத்து வருவது போல நாய்களை அலங்காரம் செய்து உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். கட்டளைக்கு கீழ்ப்படிதல், சிகை அலங்காரம், கூர்ந்து கவனிக்கும் திறன் என நாய்களுக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வார விடுமுறை நாட்களில் இந்த கண்காட்சிக்கு வந்து ஒரே இடத்தில் பல்வேறு செல்லப்பிராணிகளை கண்டு ரசித்தது மகிழ்ச்சியாக இருந்ததாக கண்காட்சிக்கு வந்த குழந்தைகள், பெண்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு வகை நாய்களுக்கு இணையாக தமிழ்நாட்டை சேர்ந்த ராஜபாளையம், கொம்பை, சிப்பிபாறை உள்ளிட்ட நாட்டு நாய்களும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை தட்டி சென்றனர். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

The post சென்னையில் பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் கண்காட்சி: 146 இனங்கள், 500க்கும் மேற்பட்ட விதவிதமான அலங்காரத்துடன் அணிவகுக்க செல்லப்பிராணிகள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Dog Exhibition ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...