×
Saravana Stores

“எய்ம்ஸ் என்றால் ஏமாற்றுதல் என்று பொருள்”: திமுகவின் முரசொலி நாளேடு கடும் விமர்சனம்

சென்னை: எய்ம்ஸ் என்றால் ஏமாற்றுதல் என்ற பொருளை தருவதாக பாஜகவை திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், ஜன­வரி 27 மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னைக்கு அடிக்­கல் நாட்­டப்­பட்ட நாள். பொது­வாக மருத்­து­வ­ம­னை­யைக் கட்­டித் திறந்­தால் திறந்த நாளைக் கொண்­டா­டு­வார்­கள். பா.ஜ.க.வின் எய்ம்ஸ்க்கு என்ன பெருமை என்­றால் பல ஆண்­டு­க­ளாக அடிக்­கல் நாட்­டும் நாளையே கொண்­டாட வைத்­துக் கொண்டு இருக்­கி­றது.

2019 ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக மது­ரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னைக்­கான அடிக்­கல்லை பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி வைத்­தார். 2020,2021,2022,2023 ஆகிய ஆண்­டு­கள் முடிந்து விட்­டது. 2024 ஆம் ஆண்­டும் தொடங்­கி­விட்­டது. அவ­ரது ஐந்­தாண்டு ஆட்­சி­யும் முடி­யப் போகி­றது. அடுத்த தேர்­த­லும் வந்­து­விட்­டது. எய்ம்ஸ் தான் வந்த பாடில்லை.

நேற்­றைய தினம் சமூக வலைத்­த­ளங்­க­ளில், ‘எய்ம்ஸ் என்­னாச்சு?’ என்­பதே மிகப்­பெ­ரிய பேசு பொரு­ளாக ஆகி இருந்­தது. சமூக ஊட­கங்­க­ளில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­கள் வலி­மை­யா­னவை.

•மது­ரை­யில் 2019 ஜன­வரி 27 ஆம் தேதி பிர­த­மர் மோடி அடிக்­கல் நாட்டி 5 வரு­ஷம் ஆச்சு. எய்ம்ஸ் என்­னாச்சு?

•முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அடிக்­கல் நாட்டி 15 மாதங்­க­ளில் திறப்­பு­ விழா கண்­டது கலை­ஞர் நூற்­றாண்டு உயர்­சி­றப்பு மருத்­து­வ­மனை. பிர­த­மர் மோடி அடிக்­கல் நாட்டி ஐந்து ஆண்­டு­கள் ஆச்சு. எய்ம்ஸ் என்­னாச்சு?

•இமா­ச­லப்பிர­தே­சம் பிலாஸ்­பூ­ரில் 1,470 கோடி ரூபாய் மதிப்­பில் 2017 அக்­டோ­ப­ரில் பிர­த­மர் மோடி அடிக்­கல் நாட்­டிய எய்ம்ஸ் கட்டி முடிக்­கப்­பட்டு 2022 அக்­டோ­பர் 5 ஆம் தேதி திறந்­தும் வைத்து விட்­டார். ஆனால் மதுரை எய்ம்ஸ் இன்­னும் பொட்­டல் காடா­கவே காட்­சி­ய­ளிக்­கி­றது.* மதுரை எய்ம்ஸ் அடிக்­கல் நாட்டு விழா­வில் பேசிய பிர­த­மர் மோடி, ‘தமிழ்­நாட்­டுக்கு இன்­னும் நிறைய திட்­டங்­களை வழங்­கு­வோம்’ என்­றார். ஒரு எய்ம்ஸ் மருத்­து­வ­ ம­னைக்கே வழி­யில்­லாத கையில்­தான் நிறைய வடை­க­ளைச் சுட்­டார்.

•‘மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யில் 95 சத­வி­கித பணி­கள் முடி­வ­டைந்­து­விட்­டன’ என்று பா.ஜ.க. தலை­வர் ஜே.பி.நட்டா உள்­ளிட்­டோர் கலர் மத்­தாப்­பு­க­ளைக் கொளுத்­திக் கொண்டே இருந்­தார்­கள். கடைசி வரை எய்ம்ஸ் வரவே இல்லை.

•ஐந்­தாண்­டு­க­ளில் ஒரு செங்­க­லைக் கூட மோடி அரசு எடுத்து வைக்­க­வில்லை.

•2015 -– நிதி­நிலை அறிக்­கை­யில் எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னைக்­கான அறி­விப்பு வெளி­யி­டப்பட்­டது. அதே நிதி­நிலை அறிக்­கை­யில் அறி­விக்­கப்பட்ட பஞ்­சாப் பதிண்டா எய்ம்ஸ் மருத்­து­வ­மனை 2019 ஆம் ஆண்டே செயல்­பட ஆரம்­பித்­து­விட்­டது. மது­ரை­யிலோ இன்­னும் கட்­டு­மா­னப் பணி­கள் தொடங்­கவே இல்லை.

– – இவை அனைத்­தும் சமூக ஊட­கங்­க­ளில் வலம் வரு­வோர் கேட்ட கேள்­வி­கள் ஆகும். இதற்­கெல்­லாம் பா.ஜ.க. வாய்­கள், பதில் சொல்­லாது. சொல்ல முடி­யாது.

அடிக்­கல் நாட்­டி­ய­து­தான் 2019. அதனை வைத்­துத்­தான் ஐந்து ஆண்­டு­க­ளைக் ‘கொண்­டா­டிக்’ கொண்டு இருக்­கி­றோம். உண்­மை­யில் பத்து ஆண்டு விழா­வைத்­தான் கொண்­டாட வேண்­டும். ஏனென்­றால் தமிழ்­நாட்­டில் எய்ம்ஸ் நிறு­வு­வ­தற்­கான பா.ஜ.க.வின் ஏமாற்று நாட­கங்­கள் 2014 ஆம் ஆண்டு அவர்­கள் ஆட்­சிக்கு வந்­த­போதே தொடங்­கி­விட்­டது.

‘தமிழ்­நாட்­டில் எய்ம்ஸ் மருத்­து­வ­மனை அமைப்­ப­தற்­கான இடத்தை தேர்வு செய்­யுங்­கள்’ என்று முதன்­மு­த­லாக 19.6.2014 அன்று தமிழ்­நாடு அர­சுக்கு ஒன்­றிய அரசு கடி­தம் அனுப்­பி­யது. இரண்டு இடங்­க­ளைத் தேர்வு செய்து 31.0.2014 அன்று தமிழ்­நாடு அரசு, ஒன்­றிய அர­சுக்கு கடி­தம் எழு­தி­யது.

28.2.2015 அன்று ஒன்­றிய நிதி­நிலை அறிக்­கையை தாக்­கல் செய்த நிதி­அ­மைச்­சர் அருண் ஜெட்லி, ‘மது­ரை­யில் எய்ம்ஸ் மருத்­து­வ­மனை அமை­யும்’ என்று சொன்­னார்.2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை உயர்­நீ­தி­மன்­றத்­தில் பொது­நல வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டது. மது­ரை­யில் எய்ம்ஸ் மருத்­து­வ­மனை அமைய நான்கு மாத காலக்­கெ­டுவை நீதி­மன்­றம் விதித்­தது.

2018 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னைக்கு பிர­த­மர் அடிக்­கல் நாட்­டு­வார் என்று தேதியே குறித்­தார்­கள். அடிக்­கல் நாட்­டப்­பட வில்லை. 2019 ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வந்­த­தால், 2019ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 27 ஆம் தேதி அடிக்­கல் நாட்­டி­னார் பிர­த­மர். எனவே, எய்ம்ஸ் ஏமாற்­றும் சுழியை 2015 ஆம் ஆண்டே போட்­டு­விட்­டது பா.ஜ.க.

மாநில அர­சி­ட­மி­ருந்து 224.24 ஏக்­கர் நிலம் ஒன்­றிய அர­சி­டம் ஒப்­படைக்­கப்­பட்­டது. திட்ட மதிப்­பீடு ஆயி­ரத்து 977 கோடி ரூபா­யாக அதி­க­ரித்த நிலை­யில், ஓராண்டு கழித்து ஜப்­பான் நிறு­வ­னத்­தி­டம் இருந்து கடன் பெறும் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது. 82 சத­வீ­தம் நிதி­யான ஆயி­ரத்து 627 கோடி ரூபாய் ஜப்­பா­னின் ஜைய்கா நிறு­வ­னத்­தி­டம் இருந்து கடன் பெறப்­படும். எஞ்­சிய 18 சத­வி­கி­தம் மட்­டுமே ஒன்­றிய அரசு வழங்­கும் என கூறப்­பட்­டது. மற்ற மாநி­லங்­க­ளில் அமைக்­கும் மருத்­து­வ­ம­னை­கள் எல்­லாம் பா.ஜ.க. அர­சின் நிதி­யில் இருந்து அமைக்­கப்­ப­டு­மாம். தமிழ்­நாட்­டில் அமையும் எய்ம்ஸ்க்கு மட்­டும் ஜப்­பான் நிதியை எதிர்­பார்ப்­பார்­க­ளாம். தமிழ்­நாடு என்ன ஜப்­பா­னில் இருக்­கி­றதா? இதற்கு மட்­டும் ஏன் ஓர­வஞ்­சனை?

மக்­கள் எழுப்­பும் கேள்வி இது­தான்…

•மது­ரைக்கு அருகே கீழடி அருங்­காட்­சி­ய­கம்

•கலை­ஞர் நூற்­றாண்டு நினைவு நூல­கம்

•கலை­ஞர் நூற்­றாண்டு ஏறு­த­ழு­வு­தல் அரங்­கம் ஆகிய மூன்­றை­யும் மூன்று ஆண்­டு­க­ளுக்­குள் மது­ரைக்கு உரு­வாக்­கிக் கொடுத்­துள்­ளார் ‘திரா­விட மாடல்’ முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள். ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யைக் கூட கொண்டு வராத பிர­த­மர் நரேந்­தி­ர­மோ­டி­தான் வாக்­குக் கேட்டு வரப்­போ­கி­றார்.

எய்ம்ஸ் என்­றால் ‘ஏமாற்­று­தல்’ என்ற பொருளை இப்­போது தரு­கி­றது. அதைத்­தான் தமிழ்­நாட்டு மக்­க­ளும் பா.ஜ.க.வுக்கு வாரி வழங்­கு­வார்­கள்.

The post “எய்ம்ஸ் என்றால் ஏமாற்றுதல் என்று பொருள்”: திமுகவின் முரசொலி நாளேடு கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : AIIMS ,TIMUKA ,MURASOLI DIARY ,Chennai ,BJP ,Murasoli ,Dimukha ,Madurai Aims Hospital ,Dimukawa ,
× RELATED மதுரை எய்ம்ஸ் 2025 டிசம்பரில் வகுப்புகள் துவக்கம்