×

கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; கிராம மக்கள் அச்சம்…நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கியதில் சாம்பசிவம் என்ற விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் 8 யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜ கடை வனப்பகுதியில் முகாமிட்டிருந்தது. அங்கிருந்து யானைகளை விரட்டும் போது பிரிந்த ஒற்றை யானை, மகாராஜ கடை காப்பு காட்டில் சுற்றி திரிந்தது. அவ்வப்போது விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜ கடையை சேர்ந்த விவசாயி சாம்பசிவம், விடியற்காலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது தோட்டத்தில் கொள்ளு பயிரை அறுவடை செய்வதற்காக தனது நிலத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது இருட்டில் பதுங்கி இருந்த ஒற்றை காட்டு யானை, விவசாயி சாம்பசிவத்தை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்த கிராமத்தினர், தோட்டத்திற்கு சென்று விவசாயியை மீட்டு வெளியே கொண்டுவந்தனர். உடனடியாக வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் ஒரு மாத காலமாக யானையை விரட்டாமல் இருப்பதாகவும், பொதுமக்கள் கூறும் புகார்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சாம்பசிவத்தின் உறவினர்கள் மற்றும் போதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மகாராஜ கடை சாலையில் சாம்பசிவத்தின் உடலை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல் அறிந்து ஏடிஎஸ்பி சங்கர் மற்றும் டிஎஸ்பி சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உடனடியாக யானையை விரட்ட வேண்டும். உயிரிழந்த சாம்பசிவத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யானை தாக்கி விவசாயி இறந்ததால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; கிராம மக்கள் அச்சம்…நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்..!! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Sambasivam ,Karnataka ,Maharaja Sada forest ,Krishnagiri district ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை...