×

குடியரசு தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 101 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விருதுநகர், ஜன. 29: விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் குடியரசு தினத்தில் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற சட்ட விதிறை மீறி பணிக்கு அமர்த்திய 39 கடைகள், 52 உணவு நிறுவனங்கள், 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 101 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குடியரசு தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 101 நிறுவனங்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Republic Day ,Virudhunagar ,Labor Assistant Commissioner ,Maivizhichelvi ,
× RELATED முத்திரையில்லா தராசு பயன்பாடு 36 நிறுவனங்களுக்கு அபராதம்