×

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 5 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு

 

அந்தியூர்,ஜன.29: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மேற்க்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வரட்டுபள்ளம் அணை அமைந்துள்ளது. மொத்தம் 33.46 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 33.07 அடி நீர் இருப்பு உள்ள நிலையில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு உத்தரவின் பேரில் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு நேற்று எம்எல்ஏ அந்தியூர் ஏ‌.ஜி. வெங்கடாசலம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி முன்னிலையில் விவசாயிகளுடன் திறந்து விட்டார்.

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளான கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் ஏரி, பிரம்மதேசம் ஏரி,வேம்பத்தி ஏரி மற்றும் ஆப்பக்கூடல் ஏரி உள்ளிட்ட 5 ஏரிகளுக்கு மொத்தம் 28.94 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப 15 நாட்கள் தண்ணீர் திறந்த விடப்படுகிறது.

இந்த தண்ணீர் திறப்பு மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் தமிழ் பாரத், சங்கராப்பாளையம் ஊராட்சி தலைவர் குருசாமி, பாசன விவசாயிகள் சங்க தலைவர் நாகராஜா, முன்னாள் ஊராட்சி தலைவர் சூரியபிரகாஷ், முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் கவின் பிரசாத் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 5 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Varattupallam dam ,Andhiyur ,Varatupallam Dam ,Western Ghats ,Erode district ,
× RELATED மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு