×

சேலம் சரகத்தில் உயர்பதவிகளை அலங்கரிக்கும் பெண் அதிகாரிகள்

சேலம்: சேலம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த கார்மேகம் மாற்றப்பட்டு, தோட்டக்கலை துறை இயக்குனராக பணியாற்றி வந்த பிருந்தாதேவி, சேலம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக, ரோகிணி 2017 ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டு 2019 ஜூன் மாதம் வரை பணியாற்றினார். தற்போது, 2வது பெண் கலெக்டராக பிருந்தாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சேலம் மாவட்டத்தின் 174வது கலெக்டராக பொறுப்பேற்க உள்ளார். ஏற்கனவே, நாமக்கல் கலெக்டராக உமா, தர்மபுரி கலெக்டராக சாந்தி, கிருஷ்ணகிரி கலெக்டராக சரயு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இதே போல், சேலம் சரக டிஐஜியாக உமா, சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக விஜயகுமாரி, சேலம் கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, சேலம் மாவட்ட வருவாய் அலுவலராக மேனகா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் புதிய கலெக்டர் பிருந்தாதேவி, ஓரிரு நாளில் பொறுப்பேற்கவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேலம் சரகத்தில் பல்வேறு உயர் பதவிகளை பெண் அதிகாரிகளை அலங்கரித்து வருகின்றனர் என்பது மகளிரிடையே மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

The post சேலம் சரகத்தில் உயர்பதவிகளை அலங்கரிக்கும் பெண் அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Karmegam ,Brindadevi ,Rohini ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...