×

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நாமக்கல், ஈரோடு, பொள்ளாச்சி, தர்மபுரி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை: திமுக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தி வருகிறது. இது வரை கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கோவை, நீலகிரி, சேலம், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று நாமக்கல், ஈரோடு தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது. அவர்களுடன் தேர்தல் பணிகள் ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த அமைச்சர்கள் ேக.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். மாலையில் ெபாள்ளாச்சி, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது.

The post திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நாமக்கல், ஈரோடு, பொள்ளாச்சி, தர்மபுரி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Dimuka Election Coordination Committee ,Namakkal ,Erode ,Pollachi ,Dharmapuri ,Chennai ,Dimuka Parliamentary Election Supervision and Coordination Committee ,Anna Athawalaya ,Krishnagiri ,Thiruvallur ,Govai ,Neelgiri ,Salem ,Tiruppur ,Parliament Constituency ,Dinakaran ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!