×

48வது சுற்றுலா பொருட்காட்சியை பார்வையிட 2.47 லட்சம் பேர் வருகை: சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சுற்றுலா பொருட்காட்சியை 14 நாட்களில் மட்டும் 2.47 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை தீவுத்திடலில் 48வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடந்து வருகிறது. இதில், ‘‘சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்’’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்காட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, நான் முதல்வன் திட்டம், காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, தொழில், முதலீடு மற்றும் வர்த்தகத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, சி.எம்.டி.எ, ஆவின், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை மாநகராட்சி உள்பட தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் 49 அரங்கங்கள், ஒன்றிய அரசு நிறுவனங்களின் 2 அரங்கங்கள் என மொத்தம் – 51 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 80,000 சதுர அடி பரப்பளவில் பொழுதுபோக்கு வளாகம் அமைந்துள்ளது. அதில் ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் மற்றும் நவீன கேளிக்கை சாதனங்கள் மனதை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் ரயில், பனிக்கட்டி உலகம், மீன் காட்சியகம், பேய் வீடு, பறவைகள் காட்சி, 3டி தியேட்டர், போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதனிடையே தீவுத்திடல் பொருட்காட்சி தொடங்கிய 14 நாட்களில் மட்டும் 2,47,769 பேர் பார்வையிட்டுள்ளனர். ஞாயிற்றுகிழமையான நேற்று ஒரே நாளில் குறைந்தது 50,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post 48வது சுற்றுலா பொருட்காட்சியை பார்வையிட 2.47 லட்சம் பேர் வருகை: சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : 48th Tourism Expo ,CHENNAI ,48th India Tourism and Industry Expo ,Chennai Island ,48th Tourism Fair ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!