×

கந்துவட்டி தொல்லை தொழிலதிபர் தற்கொலை

கோவில்பட்டி: கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டி (38). பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்ததோடு ரியல் எஸ்டேட்டிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆறுமுகப்பாண்டி தனது தொழில் அபிவிருத்திக்காக 10க்கும் மேற்பட்டோரிடம் கடன் பெற்று மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொழில் சரியாக நடைபெறாததால் அவர், வட்டி கொடுக்க முடியாமல் திணறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 25ம்தேதி விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

The post கந்துவட்டி தொல்லை தொழிலதிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Arumukhapandi ,9th Street, Veeravanchi Nagar, Kovilpatti ,Chitra ,Ganduvatti Thollai ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி...