×

அரசு நிலத்தில் அமைக்கப்பட்ட ஆஞ்சநேயர் கொடிக்கம்பம் அகற்றம்: மண்டியா அருகே பதற்றம்

மண்டியா: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், கொரக்கோடு கிராமத்தில், கிராமிய தியேட்டர் அருகே 108 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆஞ்சநேயர் கொடிக்கம்பம் ஏற்ற திட்டமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் தாலுகா நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இந்நிலையில், இக்கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இதையடுத்து பாஜ, பஜ்ரங்தளம், மஜத கட்சியினர் அங்கு கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

தகவலறிந்து போலீசார் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து அமைச்சர் செலுவராயசாமி கூறுகையில், ‘அரசு நிலத்தில் மூவர்ண கொடி ஏற்றத்தான் அனுமதிக்கப்படும். வேண்டுமென்றால் காவிக்கொடியை கோயில் முன்பு ஏற்ற ஏற்பாடு செய்து தருகிறோம். இந்த விவகாரத்தில் அரசியல் கூடாது. அரசியல் சாசனத்திற்கு எதிராக கொடிக்கம்பம் அமைத்தால் அப்புறப்படுத்தினோம் என்றார்.

The post அரசு நிலத்தில் அமைக்கப்பட்ட ஆஞ்சநேயர் கொடிக்கம்பம் அகற்றம்: மண்டியா அருகே பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Anjaneya ,Mandya ,Korakkodu village, ,Mandya district, Karnataka ,taluk ,Anjaneyar ,Dinakaran ,
× RELATED வாய்க்கால் பாலம் இடிப்பு விவகாரம்: இரவு நேரத்தில் பொதுமக்கள் போராட்டம்