×

தென்காசியில் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: தென்காசியில் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன் என முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரத்தில் உள்ள பெரியபாலம் அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (28.1.2024) அதிகாலை சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், புளியங்குடி கிராமம், பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த போத்திராஜ் (வயது 32) த/பெ. மூக்கையா கோனார், வேல்மனோஜ் (வயது 30) த/பெ.கோபால், சுப்பிரமணியன் (வயது 29) த/பெ.பரமசிவன், கார்த்திக் (வயது 24) த/பெ.பட்டமுத்து, முத்தமிழ்செல்வன் (வயது 23) த/பெ.ராமமூர்த்தி, மனோ (வயது 19) த/பெ.மாரிச்சாமி ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

The post தென்காசியில் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tenkasy ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,Tenakasi ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...