×

சுற்றுலா தலங்களை பார்வையிட ஊட்டியில் சைக்கிளில் பயணிக்கும் வெளிநாட்டினர்

ஊட்டி: ஊட்டியில் குளுகுளு காலநிலையை அனுபவிக்க வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சைக்கிள் மூலம் நகரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு மகிழ்ந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு குளு காலநிலையை கொண்டாட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதில், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை காண முடிகிறது.

மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்கவும், பழங்குடியின கிராமங்களுக்கு செல்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், லண்டனை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுமார் 10 பேர் தற்போது ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் ஊட்டியில் முதன்முதலாக அமைக்கப்பட்ட புனித ஸ்டீபன் தேவாலயம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், ஊட்டி நகரம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். மேலும் தொழிற்சாலையில் தேயிலை தயாரிக்கும் விதம் குறித்து அறிந்து கொள்ள உள்ளதாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இவர்கள் வாடகை சைக்கிள் மூலம் நகரில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும், குன்னூர், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வந்தனர்.

The post சுற்றுலா தலங்களை பார்வையிட ஊட்டியில் சைக்கிளில் பயணிக்கும் வெளிநாட்டினர் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Kuluklu ,Klu Klu ,Nilgiri ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...