×

குன்றத்தூரில் மின்மாற்றியில் ஏறி போதை வாலிபர் குத்தாட்டம்: வீடியோ வைரல்

குன்றத்தூர்: குன்றத்தூரில் நேற்று மாலை உயர் அழுத்த மின்மாற்றியில் ஏறி நின்று ஒரு வாலிபர் குத்தாட்டம் போட்ட வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை அருகே குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வரம் கோயில் அருகே மின்வாரியத்துக்கு சொந்தமான அதிக உயர் அழுத்த மின்மாற்றி இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை அந்த மின்மாற்றியில் கண்ணிமைக்கும் நேரத்தில் மதுபோதையில் ஒரு வாலிபர் கடகடவென ஏறி நின்றபடி, பல்வேறு திரைப்படப் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு கொண்டிருந்தார்.

இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர். மேலும், பலர் இக்காட்சிகளை வீடியோ படம்பிடித்து பல்வேறு சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அந்த வாலிபர் மதுபோதையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஏறி நின்று குத்தாட்டம் ஆடினாரா அல்லது தற்கொலைக்கு முயற்சித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அந்த வாலிபர் நடனமாடியபோது அந்த மின்மாற்றியில் மின்சாரம் இருந்ததா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்ததும் குன்றத்தூர் போலீசார் விரைந்து வந்து, மின்மாற்றியில் நடனமாடிய மதுபோதை வாலிபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரிக்கின்றனர். மேலும் அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர், எதனால் இவ்வாறு நடந்து கொண்டார் என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post குன்றத்தூரில் மின்மாற்றியில் ஏறி போதை வாலிபர் குத்தாட்டம்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Kunradhur ,Kunradthur ,Thirunageswaram temple ,Chennai ,
× RELATED குன்றத்தூர் அருகே குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.!!