×

மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. திமுக-காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி 21 விருப்ப தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கவுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக மிகப்பெரிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக – காங்கிரஸ் இடையே இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை குழுவில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய்குமார், செல்வப்பெருந்தகை இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி 21 விருப்ப தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கவுள்ளது.

கடந்த முறை வென்ற 9 மக்களவைத் தொகுதிகள் உள்பட தற்போது போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலையும் சேர்த்து காங்கிரஸ் கட்சி வழங்கவுள்ளது. காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளையும், புதிதாக நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென் சென்னை, அரக்கோணம் ஆகிய தொகுதிகளையும் பெற காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.

 

The post மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Congress ,Lok Sabha elections ,Chennai ,Chennai Anna Vidyalaya ,Dimuk-Congress ,Congressional Party ,Dinakaran ,
× RELATED பாஜவின் 417 வேட்பாளர்களில் 116 பேர் கட்சி...