×

மோடி அரசை கண்டித்து தஞ்சாவூரில் விவசாய தொழிற்சங்கங்கள் பேரணி

தஞ்சாவூர்: விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க நாடு தழுவிய டிராக்டர், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி! ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மோடி அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் டிராக்டர், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி நேற்று முன்தினம் மாலை தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள ஐடிஐ விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கியது. பேரணி மேலவஸ்தாச்சாவடி ரவுண்டானா வந்தடைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணிக்கு ஐக்கிய விவசாய முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். பல்வேறு விவசாய சங்க தலைவர்கள்முத்து உத்திராபதி, பாஸ்கர், செந்தில்குமார், ராமச்சந்திரன், காளியப்பன், பழனிராஜன், கோவிந்தராஜ், அருணாச்சலம், ஏ.கே.ஆர்.இரச்சந்திரன், முகம்மது இப்ராஹிம், ராஜேந்திரன், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சேவியர், தில்லைவனம், ஜெயபால், எனமோகன்ராஜ், ராஜன் மற்றும் விவசாய சங்க, தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post மோடி அரசை கண்டித்து தஞ்சாவூரில் விவசாய தொழிற்சங்கங்கள் பேரணி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Modi government ,United Farmers Front ,Modi ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...