×

பள்ளபட்டி அரசு மருத்துவமனை அருகில்

கரூர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் அரவக்குறிச்சி, ஜன. 28: பள்ளபட்டி அரசு மருத்துவமனை, கரூர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர். பள்ளபட்டியின் முக்கூடல் சந்திப்ப்பு குறுகலான பகுதியாகும். இங்கு அரசு மருத்துவமணை ஜி.எச்.கார்னர் அருகே கரூர் செல்லும் சாலையில் வங்கிகள், அரசு மருத்துவமணை, வணிக வளாகங்கள் உள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் இந்த சந்திப்பில் நின்று செல்வதாலும் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஓரிருமுறை இங்கே ஏற்பட்டுள்ள விபத்துக்களால் இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள் கார் உள்ளிட்டவை அதிவேகமாக வந்து திரும்புகின்றன. இதனால் மக்களின் கருதி பெரும் விபத்து ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத்துறை வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதே வாகனஓட்டிகள், பொதுமக்களின் கோரிக்கையாகும்.

The post பள்ளபட்டி அரசு மருத்துவமனை அருகில் appeared first on Dinakaran.

Tags : Pallapatti Government Hospital ,Aravakurichi ,Karur Road ,Karur ,Government Hospital ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...