×

பாலியல் அவதூறு வழக்கில் ரூ.690 கோடி நஷ்ட ஈடு வழங்க டிரம்புக்கு உத்தரவு: நியூயார்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நியூயார்க்: பாலியல் அவதூறு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு ரூ.690 கோடி நஷ்ட ஈடாக வழங்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்புக்கு நியூயார்க் நகர நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்ட போது அவர் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். அதில், பெண் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜீன் கரோல் கடந்த 1996ம் ஆண்டு மான்ஹட்டன் உயர்தர டிபார்ட்மென்டல் ஸ்டோரின் உடை மாற்றும் அறையில் வைத்து டிரம்ப் தன்னை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து 2022ல் டிரம்ப் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கும் கரோல் தொடர்ந்தார். முதலில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் கரோலுக்கு ரூ.41.5 கோடி இழப்பீடு தர டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அவதூறு வழக்கை விசாரித்த நியூயார்க் நகர நீதிமன்றம், கரோலின் நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததற்காக ரூ.152 கோடியும், நஷ்டத்தை ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ.538 கோடியும் வழங்க உத்தரவிட்டு நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பளித்தது. இது மாபெரும் சட்ட வெற்றி என 80 வயதாகும் கரோல் கூறி உள்ளார்.

The post பாலியல் அவதூறு வழக்கில் ரூ.690 கோடி நஷ்ட ஈடு வழங்க டிரம்புக்கு உத்தரவு: நியூயார்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Trump ,New York court ,New York ,New York City court ,president ,Donald Trump ,Jean Carroll ,2016 US presidential election ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்