×

மோடியை கிண்டல் செய்த கேரள ஐகோர்ட் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கேரள உயர் நீதிமன்றத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஒரே நாடு, ஒரே பார்வை, ஒரே இந்தியா என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தப்பட்டது. 9 நிமிட நாடகத்தில் உயர் நீதிமன்ற மற்றும் சட்டத்துறையை சேர்ந்த பணியாளர்கள் பங்கேற்று நடித்தனர். இந்த நாடகத்தில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களை கிண்டல் செய்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கேரள உயர் நீதிமன்ற சட்டப்பிரிவு மற்றும் பாஜ வக்கீல்கள் பிரிவு சார்பில் உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், பிரதமர் மோடி மற்றும் மத்திய சட்டத்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து நாடகத்தை எழுதிய கோர்ட் கீப்பர் டி.எம். சுதீஷ் மற்றும் உதவி பதிவாளர் டி.ஏ. சுதீஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற லஞ்ச ஒழிப்பு பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post மோடியை கிண்டல் செய்த கேரள ஐகோர்ட் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Kerala iCourt ,Modi ,Thiruvananthapuram ,eve ,Republic Day ,Kerala High Court ,High Court ,Dinakaran ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...