×

ஷேர் மார்க்கெட் தொழிலில் நஷ்டம் கொள்ளையடித்து கடன்களை அடைத்த ஐ.டி. பட்டதாரி

நாகர்கோவில் : குமரியில் வீடுகளில் கொள்ளையடித்து கிடைத்த நகைகளை விற்று, கடனை அடைத்ததாக கொள்ளையன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்துக்குட்பட்ட பிளசண்ட் நகர் பகுதியை சேர்ந்த டாக்டர் கலைக்குமார் (52) என்பவரின் வீட்டில் 90 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் கடந்த 6ம்தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நேசமணி நகர் போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது கேரள மாநிலம் பலராமபுரத்தை சேர்ந்த ஆதித் கோபன் என்ற முத்துக்கிருஷ்ணன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து பஞ்சாபில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பிடித்து நாகர்கோவில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் டாக்டர் கலைக்குமார் வீடு மட்டுமின்றி, தக்கலை 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதையடுத்து முத்துகிருஷ்ணனை கைது செய்து, அவரிடம் இருந்து 90 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான முத்துகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: முத்துக்கிருஷ்ணனின் சொந்த மாநிலம் கேரளா ஆகும். பி.எஸ்.சி. தகவல் தொழில் நுட்பம் படித்துள்ள இவர் பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். இவரது மனைவி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவராவார். முத்துகிருஷ்ணன், ஷேர் மார்க்கெட்டில் அதிகளவில் பணம் முதலீடு செய்வது வழக்கம். ஆனால் இதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் தொல்லை அதிகரித்ததால் பல இடங்களில் கொள்ளையடித்து உள்ளார். அதில் கிடைத்த நகைகளை விற்றும், அடகு வைத்தும் கடன்களை அடைத்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

The post ஷேர் மார்க்கெட் தொழிலில் நஷ்டம் கொள்ளையடித்து கடன்களை அடைத்த ஐ.டி. பட்டதாரி appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari ,Dr. ,Kalaikumar ,Pleasant Nagar ,Nesamaninagar ,Police Station ,
× RELATED ஜூலை மாதம் வெளியாகும் ரயில் கால...