×

பிரேமலதா வேண்டுகோள் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் தேமுதிக கொடி ஏற்றி பறக்கவிட வேண்டும்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முதல் தேமுதிக கொடியை ஏற்றி பறக்கவிட வேண்டும் என்று தொண்டர்களுக்கு பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மீண்டும் 28ம் தேதி (இன்று) முதல் தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, வட்டம், கிளை கழகம், கிராமங்கள் வரை உள்ள தேமுதிக கொடியை ஏற்றி பட்டொளி வீசி பறக்க விட வேண்டும் என தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பிரேமலதா வேண்டுகோள் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் தேமுதிக கொடி ஏற்றி பறக்கவிட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Premalatha ,Tamil Nadu ,Chennai ,DMUD ,DMUDI ,General Secretary ,DMUDIK ,Vijayakanth ,
× RELATED தமிழ்நாடு மின் வாரியத்தில் காலி...