×

செங்கல்பட்டில் பரபரப்பு; பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை: மர்மநபர்களுக்கு வலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். மர்மநபர்களை பிடிக்க, போலீசார் 2 தனிப்படைகள் அமைத்துள்ளனர். செங்கல்பட்டு, முருகேசனார் தெருவை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஸ்வரன் (28). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விக்னேஸ்வரன், குடும்பத்துடன்  சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் விக்னேஸ்வரன், ஒரு வழக்கு விசாரணைக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு குடும்பத்துடன் புறப்பட்டார். அப்போது, செங்கல்பட்டு அருகே ஒழலூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு வழக்கு விசாரணைக்கு சென்றார். அதன்பின்னர், வீடு திரும்பினார். இரவு 9.30 மணியளவில் விக்னேஸ்வரனுக்கு செல்போன் அழைப்பு வந்தது. பின்னர் அவர், ஒழலூர் பிரதான சாலைக்கு சென்றார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள், விக்னேஸ்வரனை அரிவாளால் சரமாரி வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து செங்கல்பட்டு ஏஎஸ்பி ஆசிஷ் பச்சோரா மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், விக்னேஸ்வரனுக்கும் செங்கல்பட்டை சேர்ந்த ரவுடி அன்வர் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதனால் அவர், அடியாட்களை வைத்து ரவுடி விக்னேஸ்வரனை கொலை செய்தாரா, அல்லது குள்ள சீனு கொலை வழக்கில் இவருக்கு முக்கிய தொடர்பு இருப்பதால், அவர்களது கூட்டாளிகள் வெட்டி கொன்றார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து எஸ்ஐ சங்கர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்….

The post செங்கல்பட்டில் பரபரப்பு; பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை: மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Stirge ,Chengalpat ,Chengalpattu ,Rudi Saramari ,Sangalpat ,
× RELATED செங்கல்பட்டில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது