×

யுஜிசியின் பட்டியலில் கல்லூரிகளை சேர்ப்பதற்கான விதிகள் சீரமைப்பு: புதிய விதிகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம்

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) சட்டம், 1956ன் பிரிவு 12பி-ன் கீழ் கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி. பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இதற்காக கல்வி நிறுவனங்களில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை யு.ஜி.சி. பரிசீலித்து, யு.ஜி.சி.யின் 1975ல் உள்ள விதிகளின்படி (மானியங்களுக்கான நிறுவனங்களின் தகுதி) பிரிவு 12பி-ன் கீழ் கல்லூரிகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இந்நிலையில் யு.ஜி.சி.யின் இந்த விதிகள் மாற்றப்பட்டு, புதிய விதிகள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக யு.ஜி.சி. அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக யு.ஜி.சி.யின் செயலாளர் மனீஷ் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 1956ம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் பிரிவு 25ல், 12பி பிரிவில் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்திய அரசாங்கத்தால் பல்கலைக்கழக மானியக்குழுவின் பட்டியலில் கல்லூரிகளை சேர்க்க விதிகள் இருக்கிறது. ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து நாட்டில் உயர்கல்வி, பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது.

அந்தவகையில் தேசிய கல்விக் கொள்கையில், யு.ஜி.சி.யின் பட்டியலில் கல்லூரிகளை சேர்ப்பதற்கான விதிகளை சீரமைப்பதற்காக, அதன் முந்தைய விதிகளை திருத்த முடிவு செய்து, வரைவு பல்கலைக்கழக மானியக் குழு (மானியங்களை பெறுவதற்கான கல்லூரிகளின் தகுதி) விதிகள் 2024ஐ யு.ஜி.சி. தயாரித்து இருக்கிறது. இந்த புதிய விதிகள் குறித்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அதுபற்றி கருத்துகள் தெரிவிக்க விரும்புபவர்கள் suggestions.collegesregulation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

The post யுஜிசியின் பட்டியலில் கல்லூரிகளை சேர்ப்பதற்கான விதிகள் சீரமைப்பு: புதிய விதிகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : UGC ,CHENNAI ,U.G.C. ,Dinakaran ,
× RELATED ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை...