×

கோவை, குமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே!

சென்னை: தமிழ்நாட்டில் தைப்பூசத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட தொடர் விடுமுறை நாளையுடன் முடிவதையடுத்து, கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை சிறப்பு ரயில் இரவு 11.30 மணிக்கும், குமரி சிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்கும் சென்னைக்குப் புறப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை கோவையிலிருந்து இரவு 11.30க்கு இந்த ரயில் புறப்பட்டு, ஜனவரி 29ம் தேதி நள்ளிரவு 12:10 க்கு திருப்பூரைச் சேருகிறது. அங்கிருந்து நள்ளிரவு 1 மணி அளவில் ஈரோடு வருகிறது.

2 மணிக்கு சேலம்,3: 55 மணிக்கு ஜோலார்பேட்டை, காலை 5 மணிக்கு காட்பாடி, 6:43 க்கு அரக்கோணம், 7:38 மணிக்கு பெரம்பூர் மற்றும் காலை 8:30க்கு சென்னை ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்து அடைகிறது. 29ம் தேதி மதியம் 1:45க்கு சென்னையில் இருந்து மீண்டும் புறப்பட்டு பெரம்பூர் அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு திருப்பூர் வந்து இரவு 11: 05 மணிக்கு கோவை வந்து சேர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கோவை, குமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chennai ,Railway ,Southern Railway ,Kanyakumari ,Thaipusam ,Tamil Nadu ,Kumari ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...