×

பெண் எழுத்தாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

வாஷிங்டன்: பெண் எழுத்தாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

பொது வெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் முன்னள் அதிபர் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நியூயார்க்கில் உள்ள நடுவர் மன்றதில் நடைபெற்றது. 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி எழுத்தாளர் ஜீன் கரோல் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் 83.3 மில்லியன் டாலர் (ரூ.680 கோடி) நஷ்ட ஈடு வழங்க டிரம்புக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பு அபத்தமானது என்றும் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார. முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கபட்டிருந்தார். இந்நிலையில் இந்த தீர்ப்பு டிரம்ப்-க்கு பின்னடைவை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பெண் எழுத்தாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : US ,President Trump ,Washington ,Jean Carroll ,US President Trump ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்