×

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறார். சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணி தயாரிப்பு, வாகன தயாரிப்பு, மின்சார வாகன தயாரிப்பு, விண்வெளி, பாதுகாப்பு, தரவு சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது.

ஜன.7, 8-ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார். ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வர் பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், அரசு பிரதிநிதிகளை சந்திக்கிறார். 10 நாட்கள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் செல்லும் முதல்வர் பிப்.7ல் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

 

The post வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Spain ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,MLA ,K. Stalin ,World Investors Conference ,Government of Tamil Nadu ,Mu K. Stalin ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...