×

ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை நலத்திட்ட உதவி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

ஊட்டி : ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 75வது குடியரசு தினவிழா நேற்று நடந்தது, விழாவில், மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டு, வண்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர், அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தன்னலமற்ற சேவை, கடமை, நேர்மை மற்றும் ஈடுபாட்டுடன் பணியாற்றியமைக்காக 18 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கத்தினை வழங்கினார். வருவாய்த்துறை சார்பில் 12 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 4 நபர்களுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 3 நபர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும், அரசு மருத்துவ கல்லூரி சார்பில் 2 பேருக்கும், பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் 2 பேருக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் 2 நபருக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 5 பேர் உட்பட 122 ேபருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் போரில் வீரமரணமடைந்த படைவீரரின் கைபெண்ணிற்கு வருடாந்திர பராமரிப்பு மானியத்தொகை 1 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் வருடாந்திர பராமரிப்பு தொகை வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வதார இயக்கம் சார்பில் ஒரு நபருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான கடன் உதவி வழங்கப்பட்டது.

மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு ரூ.1 லட்சமும், மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்பில் நிதி ஆதார திட்டத்தின் கீழ் 2 பேருக்கு ரூ.8 ஆயிரமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.42 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு மின்களத்தால் இயக்கும் சக்கர நாற்காலி ரூ.1 லட்சத்து 999 ஆயிரத்து 998 மதிப்பில் வழங்கப்பட்டது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.23 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நேற்று நடந்த விழாவில், மொத்தம் ரூ.15 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 18 ஆயிரத்து 498 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, தோடர், கோத்தர் பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சியும், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் ஆகியவை நடந்தது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், போலீஸ் மோப்ப நாய் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், எஸ்பி சுந்தரவடிவேல், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் கவுசிக், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர்கள் மகராஜ், முகம்மது குதுரதுல்லா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை நலத்திட்ட உதவி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Republic Day ,Ooty Government Arts College Grounds ,Ooty ,75th Republic Day ,Government Arts College Sports Ground ,District Collector ,Aruna ,Police Department ,Republic Day Festival ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...