×
Saravana Stores

தொடர் விடுமுறை எதிரொலி திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குலசேகரம் : குமரி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலுடன் வெயில் காலங்களிலும் குளுகுளுவென ரம்மியமாக காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு திற்பரப்பு பகுதியில் அருவியாக கொட்டுகிறது.

அருவியின் மேல்பகுதியில் கோதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உல்லாச படகு சவாரியும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து பலரும் வேன், பஸ்களில் திற்பரப்பு அருவிக்கு வந்துவிடுகின்றனர். ஏன் உள்ளூர் மக்களும் வாரவிடுமுறையென்றால் திற்பரப்பு அருவியில் ஒரு குளியல் போட்டுவிட்டுதான் பல இடங்களுக்கு செல்வார்கள்.

குமரி மாவட்டத்தில் தற்போது குடியரசு தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு படையெடுத்தனர். அவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து உற்சாகமாக குளியல் போட்டு சென்றனர். தடுப்பணையில் படகு சவாரியும் களைகட்டியது. அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நீண்டநேரம் காத்திருந்து படகில் சவாரி செய்ததை பார்க்க முடிந்தது.

The post தொடர் விடுமுறை எதிரொலி திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Tilparappu Falls ,Kulasekaram ,Tilparapu Falls ,Kumari district ,Glugluvena ,Western Ghats ,Kodaiyar Tilparapu ,Tilparapu Waterfall ,
× RELATED தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால்...