×

பல்கலைக்கழகங்கள் பயம், அடக்குமுறையின் உற்பத்தி இடங்களாக உள்ளன: ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: கடந்த 23ம் தேதி மேகாலயாவில் நீதி பயணத்தை ராகுல் நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு பல்கலை கழகத்தில் மாணவர்களுடன் உரையாடிய காணொலியை சமூக வலைதளத்தில் வௌியிட்டுள்ளார். மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் ராகுல் காந்தி, “ஒரு காலத்தில் சுதந்திர சிந்தனை, அதை வௌிப்படுத்தும் கோட்டையாக இருந்த பல்கலை கழகங்கள் தற்போது பாஜ ஆட்சியில் பயம், அடக்குமுறை, கண்மூடித்தனமான குருட்டு கீழ்படிதல் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் இடங்களாக மாறி விட்டன. இந்தியாவின் எதிர்காலம் ஒரு சிறிய கூண்டுக்குள் முடங்கி கிடக்கிறது. மாணவர்களுக்கு அரசியல் தௌிவும், எதிர்ப்புணர்வும் முக்கியம். அடிமைத்தனத்தை இந்தியாவில் கொண்டுவர ஆர்எஸ்எஸ் முயல்கிறது. அனைவரும் கண்மூடி கொண்டு கேட்டு கீழ்படிந்து நடக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. ஒரு நாடு எப்படி அவ்வாறு இயங்க முடியும்? இந்த கண்மூடித் தனமான கீழ்படி தலுக்கு பதில்தான் நம் எதிர்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.

The post பல்கலைக்கழகங்கள் பயம், அடக்குமுறையின் உற்பத்தி இடங்களாக உள்ளன: ராகுல் காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,New Delhi ,Rahul ,Meghalaya ,Dinakaran ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான...